India

300 ரூபாய்க்காக நடந்த கொடூரம்.. செல்போன் கடைக்காரரை கார் ஏற்றி கொன்ற சகோதரர்கள் : கொலைக்கான பின்னணி என்ன?

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நிதின்சர்மா என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். மேலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில், கர்பாரா கிராமத்தைச் சேர்ந்த நகுல் சிங், அருண் சிங் ஆகிய சகோதரர்கள் நிதின் சர்மா கடைக்கு வந்து ஜம்முவிற்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்றனர்.

பின்னர், கடந்த ஞாயிறன்று மீண்டும் நிதின் சர்மா கடைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் நிதின் சர்மாவும் டிக்கெட் ரத்து செய்துள்ளார். இதற்காக 300 ரூபாய் பிடித்தம் செய்துள்ளார். இதனால், சகோதரர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வந்திருந்த காரை எடுத்துக்கொண்டு கடையில் இருந்த நிதின் சர்மா மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த நிதின் சர்மாவை ரத்த வெள்ளத்தில் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு, போலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து நகுலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அருணை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “பென்சில், பேனா தர்றேன்” என அழைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ரவுடிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!