India
'நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஒன்றிய அரசு ஆய்வு செய்ததா?' : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி!
நீட் போன்ற தேர்வுகளால் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதிப்புகுறித்து ஒன்றிய அரசால் ஆய்வு செய்யப்பட்டதா என்று மக்களவையில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அதன் விவரம் வருமாறு:-
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று முன்தினம் (30 நவம்பர் 2021,) மக்களவையில், மருத்துவப் படிப்புக்கான அனைத்து இந்தியப் போட்டித் தேர்வு போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் காரணமாக சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் எவ்வ கையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வு எதனையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரம் என்ன?
அத்தகைய ஆய்வேதும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன? அனைத்திந்திய அளவிலான பொது நுழைவு போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்திடவும் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும், விரிவான வினா வினை எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதில் அளித்த ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரப் பங்களித்தல் துறை இணையமைச்சர் திருமதி. பிரதிமா பௌமிக் ‘நீட்’ உள்ளிட்ட அனைத்திந்திய போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்று மக்களவையில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.
எனினும், மிக அண்மையில் கடந்த ஆகஸ்ட் 2021 முதல், மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய கோட்டாவில், ‘நீட்’ தேர்வில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘நீட்’ தேர்வு ஏற்படுத்தும் தாக்கங் கள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்றும், தனது பதிலில் அமைச்சர் தெரி வித்தார்.
மேலும், அரசியலமைப்பு சட்டம்பிரிவு 338 பி (5) ன் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், பின் தங்கிய வகுப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து உறுதி செய்திட உரிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுமானால் இந்த ஆணையத்தை அணுகிப் புகார் அளிக்கலாம் என்றும், அத்தகைய புகார்களை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது என்றும், அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!