India
“பா.ஜ.க ஆளும் பீகார், உ.பி, ம.பி மாநிலங்களில் ஏழைகள் அதிகம்” : நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ!
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் என 12 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பொருளாதார ஏழ்மை நிலை குறித்து நிதி ஆயோக் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் ஏழைமக்கள் அதிகம் இருப்பதாகத் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்டுள்ள ஏழ்மை குறியீட்டின் அறிக்கையில், பீகார் மக்கள் தொகையில் 51.91% பேர் வறுமையில் உள்ளனர். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் 41.16% பேரும், உத்தர பிரதேசத்தில் 31.79% பேரும் வறுமையில் இருக்கின்றனர். இந்த மாநிலங்களில் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன.
அதேபோல் மத்திய பிரதேசத்தில் 36.65% பேரும், மேகாலயாவில் 32.67% பேரும் ஏழைகள் உள்ளனர். மேலும் கேரளா 0.71%, கோவா 3.76 %, சிக்கிம் 3.82%, தமிழ்நாடு 4.89%, பஞ்சாம் 5.59 % பெற்று கடைசி ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த புள்ளிவிவர தகவலைப் பார்க்கும் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் அதிக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பது கூட இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதையும் பார்க்க முடிகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!