India
“சீட்டு கம்பெனிகளை போல் ஆபத்தானது கிரிப்டோ கரன்ஸி” : ரகுராம் ராஜன் சொல்வது என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெறாத நிலையிலும் சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் கரன்ஸிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முறைப்படுத்தப்படாத கிர்ப்டோ கரன்ஸிகள் சீட்டு கம்பெனிகளை போல மிகவும் ஆபத்தானவை என முன்னாள் ரிசர்வ் ங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கூறிய ரகுராம் ராஜன், “600க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்ஸிகள் சந்தையிலிருந்தாலும், பெரும்பாலானவற்றுக்கு மதிப்பே இல்லை. கிரிப்டோ கரன்ஸியில் சொத்துக்களை வைத்திருப்பது ஆபத்தானது. அவர்கள் பாதிக்கப்படக் கூடும்.
முறைப்படுத்தப்படாத மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத சீட்டு கம்பெனிகள் எந்த அளவிற்கு ஆபத்தானதோ, அதேபோல் கிரிப்பேடா கரன்ஸிகளும் ஆபத்தானவை. சீட்டு கம்பெனிகள் எப்படி மக்களின் பணத்தைத் திருடிக் கொண்டு மாயமாகிறார்களோ அதேபோலதான் இவர்களும் ஆபத்தானவர்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!