India
கிரிப்டோ கரன்ஸிக்கு தடை: டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவு?
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கிரிப்போட கரன்ஸிகள் மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் செல்ல வாய்ப்புண்டு என அண்மையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதேபோல் கடந்த வாரம் அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கிரிப்டோ கரன்ஸி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்ஸி தடை குறித்தும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேலை ஒன்றிய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடைவிதித்தால் அதில் முதலீடு செய்தவர்களின் பணம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அதில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!