India
இறந்ததாக நினைத்து 7 மணி நேரம் பிணவறை ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நபர்: உ.பி-யில் நடந்த அவலம்!
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகேஷ்குமார். இவர் மீது கடந்த வியாழனன்று வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது ஸ்ரீகேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார். இதனால் அவரது உடலை பிரே பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு அரவது உடலை ஃப்ரீசரில் வைக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதை அறிந்த உறவினர்கள் ஏழுமணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது பிணவறையில் அவரது உடலைக் காண்பித்து அடையாளங்கள் உறுதிசெய்யப்பட்டது. இதற்காக அவர்களது உறவினர்களிடம் போலிஸார் கையெழுத்து வாங்கும்போது, திடீரென ஸ்ரீகேஷ்குமார் உடல் அசைவதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது உயிரோடு இருப்பது தெரிந்தது. பின்னர் மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் இப்படி நடந்துள்ளது என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறந்ததாகக் கருதியவர் ஏழுமணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!