India
வேலை வாங்கி தருவதாக அழைத்து பாலியல் வன்கொடுமை.. பா.ஜ.க MLA மீது 10 மாதங்களில் 2வது முறையாக வழக்குப்பதிவு!
பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது கடந்த10 மாதங்களில் 2-வது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், வன்முறைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் சிக்கி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியான கோகுவான்டாவைச் சேர்ந்த 37-வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது போலிஸார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஒரு வேலைக்காக எம்.எல்.ஏ பிரதாப் லாலைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்.
வேலைவாங்கித் தருவதாகக் கூறியது மட்டுமல்லாமல், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். வல்லபாநகரில் இடைத் தேர்தல் நடந்தபின் எனக்கு தொலைபேசி அழைப்பு செய்வதை நிறுத்திவிட்டார். இதுகுறித்து நான் கேட்டபோது என்னை மிரட்டினார் என்று அந்த பெண் புகாரில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து அம்பாமாதா காவல் நிலையத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரளித்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ பிரதாப் லால் பீல் மீது கடந்த10 மாதங்களில் 2-வது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்