India
சாதிமறுப்பு திருமணம் செய்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர தந்தை - ம.பி.யில் அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் இளம் பெண் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்துவந்தார். இதையடுத்து அவரது கணவர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சிறிது காலம் தங்கப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் அந்தப் பெண் தனது குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட போபாலில் உள்ள தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தை இறந்தது குறித்து அந்தப் பெண் தனது கணவருக்குத் தெரிவிக்கவில்லை. இதனால் மிகுந்த வேதனையுடன் இருந்துள்ளார். பின்னர் இது குறித்து அவரது சகோதரி செஹோர் மாவட்டத்தில் வசிக்கும் அவரது அப்பா மற்றும் சகோதரருக்குத் தெரிவித்துள்ளார்.
பின்னர், மக்கள் வேறுசாதியில் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் அவரின் தந்தை இருந்துவந்துள்ளார். இருப்பினும் குழந்தையை அடக்கம் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்ய தந்தை மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூன்று பேரும் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தனது மகனை கொடூரமாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மகளின் உடலையும், குழந்தையின் உடலையும் காட்டுப்பகுதியின் மறைவான இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தது பத்து நாட்கள் கழித்து வனத்துறைக்கு இறந்த இரண்டு பேரின் சடலம் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ததில் மகளைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இளம் பெண்ணின் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!