India
பார்சல் பெட்டியில் இருந்து படமெடுத்த பாம்பு; அதிர்ச்சியில் வெள வெளுத்து போன நாக்பூர் குடும்பத்தினர்!
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரின் தியானேஷ்வர் பகுதியில் வசித்து வருபவர் சுனில் லகேதே. அவரது மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வருகிறார்.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை கூரியர் மூலம் சொந்த ஊருக்கு பார்சல் செய்திருக்கிறார் சுனில் லகேதே.
சுமார் 8 பார்சல் பெட்டிகள் கொண்ட பொருட்கள் கடந்த திங்களன்று நாக்பூர் சென்றடைந்தது. அப்போது ஒவ்வொன்றாக பிரித்து பார்த்துக் கொண்டிருந்த லகேதேவுக்கு நான்காவது பார்சலை பிரிக்கும் போது சத்தம் கேட்டதையடுத்து சந்தேகித்திருக்கார்.
இந்நிலையில், அந்த பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிய நிலையில் லகேதே அதிர்ச்சியுற்றுக்கிறார். இதனையடுத்து அந்த பெட்டியை வெளியே எடுத்துச் சென்ற போது அதிலிருந்து வெளியே வந்த பாம்பு வாய்க்கால் வழியாக சென்றிருக்கிறது.
உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்து சோதனை செய்ததில் அந்த பாம்பு பிடிபடாமல் ஓடியிருக்கிறது. இதனிடையே பார்சல் பெட்டிக்குள் எப்படி பாம்பு வந்தது என்று லகேதேவின் குடும்பத்தினர் குழம்பி போயுள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்