India
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவர்கள் தான் காரணம்": அமெரிக்கா மீது பழிபோட்ட பா.ஜ.க அமைச்சர்!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற 13 மாநில இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்தை அடுத்து, அடுத்து நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துள்ளது. இருந்தபோதும் பெட்ரோல் 100 ரூபாய்க்கு அதிகமாகவே அனைத்து மாநிலங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலையை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. இதற்கும் ஒன்றிய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசைக் குற்றம் சாட்டுவது சரியல்ல.
மேலும் விலை உயர்வைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்படுகிறது. எரிபொருள் விலை உலக சந்தையுடன் தொடர்புடையது. எரிபொருளின் விலையை அமெரிக்காவில் முடிவு செய்யப்படுகிறது. எனவே விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசு மீது குறை கூறுவது தவறானது" என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுக்குத் தாலிபான்கள்தான் காரணம், இது எல்லாம் ஒரு விலை உயர்வா?, பெட்ரோல் விலை உயர்ந்தால் சைக்கிளில் செல்லுங்கள் என மக்களின் துயரங்களைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!