India
“மருத்துவ துறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய இளம் பத்திரிகையாளர் எரித்துக்கொலை” : பீகாரில் நடந்த கொடூரம்!
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட பெனிபேட்டி பகுதியைச் சேர்ந்தவர் புத்திநாத் ஜா. இவர் உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்றில் பத்திரிகையாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் செயல்பட்ட வந்தார்.
இவர் தனது பகுதியில் செயல்பட்டு வந்த போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தனது செய்திகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் போலி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்துள்ளனர்
இந்நிலையில், கடந்த செவ்வாயன்று ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார். பின்னர் அன்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பிறகு வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் புத்திநாத்ஜாவின் செல்போன் சிங்னல் பெடோன் என்ற இடத்தை காட்டியுள்ளது. அங்குச் சென்று பார்த்தபோது அவரது செல்போன் மட்டுமே போலிஸாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் புத்திநாத்ஜா காணாமல் போய் ஐந்து நாட்களுக்கு பிறகு பெடோன் அருகே புதருக்குள் எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலிஸார் கண்டு பிடித்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !