India

காதலுக்கு எதிர்ப்பு.. காதலனின் தந்தையை கைது செய்த உ.பி போலிஸ்; நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை: நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், டெல்லியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்தார். இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்காததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து பெண்ணின் தந்தை தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகச் செப்டம்பர் 8ம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து டெல்லி சென்ற உத்தர பிரதேச போலிஸார் காதலனின் தந்தை மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்தனர்

பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் காதலர்கள் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில், எங்களுக்குத் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டப்பூவர் வயது இருக்கிறது. ஆனால் போலிஸார் தனது தந்தையையும், சகோதரரையும் சட்ட விரோதமாகக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்தர பிரதேச போலிஸார் சட்ட விரோத நடந்து கொண்டுள்ளனர். அதுவும் டெல்லியில் இது போன்று நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே சட்டவிரோதமாகக் கைது செய்த போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து சட்ட விரோதமாகக் கைது செய்யத போலிஸார் இருவரைப் பணி நீக்கம் செய்து ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் மிஸ்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

Also Read: முஸ்லிம்களை தொழுகை நடத்த விடாமல் சாணத்தை கொட்டி தொல்லை... இந்துத்வா கும்பல் அராஜகம்!