India
“மருத்துவமனைக்கு போகவேண்டாம்” : பெற்றோரின் மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - கேரளாவில் சோகம்!
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்திற்குட்பட்ட நாலுவயல் பகுதியைச் சேர்ந்தவர் எம்.சி.அப்துல் சத்தார். இவரது மனைவி எம்.ஏ.சபீரா. இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகச் சிறுமி பாத்திமாவுக்கு கடும் காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் இவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
மத நம்பிக்கை மற்றும் மாந்திரீக சக்தி தங்களது மகளைக் காப்பாற்றிவிடும் என்ற மூட நம்பிக்கையில் பெற்றோர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிறன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது உறவினர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்காததால் மூட நம்பிக்கை காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!