India
"கடைசி வீடியோ கால்" : தனது மாணவர்களை கடைசியாக பார்த்துவிட்டு உயிர்விட்ட கேரள ஆசிரியை!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இவர் ஆன்லைனில் தனது வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்கள் எடுத்து வந்திருந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆசிரியர் மாதவி தனது மாணவர்களுக்கு வீடியோவை மியூட் செய்து ஆடியோ வழியாகப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு இருமல் ஏற்பட்டுள்ளது.
உடனே ஆசிரியர் மாதவி, 'நான் உங்களைப் பார்க்க வேண்டும் வீடியோவை ஆன் செய்யுங்கள்' என கூறியுள்ளார். இதையடுத்து மாணவர்கள் வீடியோவை ஆன் செய்தனர். பிறகு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, 'எனக்கு உடல்நிலை சரியில்லை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்' என கூறி வகுப்பை முடித்துள்ளார்.
பிறகு, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஆசிரியர் மாதவியின் உறவினர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைசியாகத் தனது மாணவர்களைப் பார்த்து விட்டு ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்