India
கலைஞரிடத்தில் அன்பு கொண்ட புனீத் ராஜ்குமார்... 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரை சந்தித்தது ஏன் தெரியுமா?
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் 20 ஆண்டுகளாகவே முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தினரோடு நட்புடன் இருந்துவந்துள்ளார்.
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு.
தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமது குடும்பத்தில் சார்பில் இரங்கலை தெரிவிக்க கோபலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதம் தனது சகோதரர்கள் சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோருடன் கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு வந்தார் புனீத் ராஜ்குமார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், மூத்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற நிலையில் “தந்தையைக் காப்பாற்றுங்கள்’’ என்ற கோரிக்கையோடு வந்திருந்தார் புனீத் ராஜ்குமார். ராஜ்குமாரை மீட்க அன்றைய கலைஞர் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது.
கலைஞர் அரசு எடுத்த நடவடிக்கையால் வீரப்பனிடம் இருந்து ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்பட்டார். ராஜ்குமார் குடும்பம் கலைஞருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தது.
கலைஞர் மீது மிகுந்த அன்பைச் செலுத்தியவர் புனீத் ராஜ்குமார். கலைஞர் மறைந்தபோது புனீத் ராஜ்குமார் நேரில் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய புனீத் ராஜ்குமார், “எனது குடும்பமும் கலைஞர் குடும்பமும் நீண்ட நாட்களாக நல்ல நட்புறவில் இருந்து வருகிறது. எனது தந்தை கடத்தப்பட்டபோது, கலைஞர் பேருதவியாக இருந்தார்” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படியாக, தமிழகத்துடனும், முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனும் நட்புறவைப் பேணிவந்த புனீத் ராஜ்குமார் மறைந்த செய்தி தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!