India
இந்தியாவுக்குள் நுழைந்த AY.4.2 கொரோனா வைரஸ்... 6 மடங்கு வேகமாகப் பரவுமா?
AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. இரண்டாவது அலையின்போது இந்தியாவில் டெல்டா வகை வேரியண்ட் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தியது.
இந்நிலையில் AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியன் சார்ஸ் - கோவிட் 2 ஜீனோமிக் கன்சார்டியம் (INSACOG) என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உருமாற்றமடைந்த AY.4.2 என்ற வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல மகாராஷ்டிராவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் எந்த அளவுக்கு தீவிரமானது என்பது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
AY.4.2 வைரஸானது முந்தைய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கிருமிகளைக் காட்டிலும் ஆறு மடங்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் AY.4.2 எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அமைச்சர் மன்சுக் மாண்டவியா, AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!