India
'செல்போனில் கேம் விளையாடியதால் கோபம் - சிதைந்து போன குடும்பம்': தாய் - மகள் பரிதாப பலி!
ஆந்திர மாநிலம், கடப்பா நாகாஷ் பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா. இவருக்கு ஜமீர், அலிமா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குர்ஷிதா தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் குர்ஷிதாவின் மகள் அலிமாவுக்கு செல்போனில் கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மகளைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதும் அலிமா கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை.
இதையடுத்து சம்பவத்தன்று அலிமா செல்போனில் கேம் விளையாடியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தாய் குர்ஷிதா மகளின் கழுத்தைத் துப்பட்டாவால் இறுக்கியுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்து சிறுவன் ஜமீர் இருவரும் விளையாடுகிறார்கள் என நினைத்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் தங்கை அலிமாக இறந்ததைப் பார்த்து ஜமீர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது தாய் குர்ஷிதா உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!