India
குடிக்க பணம் தர மறுத்த தாய்... இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : புனேவில் கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரப்பகுதியைச் சேர்ந்தவர் விமல் டக்கோபந்த் குல்தே. இவரது மகன் சச்சின் குல்தே. இவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் மனைவியும், மகனும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சச்சின் குல்தே தனது தாயுடன் வசித்துக்கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சச்சின் குடிப்பதற்கு பணம் இல்லாததால் தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது சகோதரியை தொடர்புகொண்டு தாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பிறகு சகோதரி வீட்டிற்கு வந்தபோது சச்சின், தாய் இறந்தது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் நாமே இறுதிச் சடங்குகளைச் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது சகோதரி தாயின் உடலை நான் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பிறகு சகோதரி அறைக்கு சென்றபோது சச்சின் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் சச்சின் வீட்டிற்கு வந்து அவரது தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த சச்சினை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!