India
’காந்தி எங்களுக்கு தேசத்தந்தை இல்லை’ : சாவர்க்கர் பேரன் சர்ச்சை பேச்சு!
வீர் சாவர்க்ர் குறித்த புத்தக வெளியிட்டு விழாவில், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது " மகாத்மா காந்தி கேட்டுக் கொண்டதால்தான் வீர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார்" என தெரிவித்திருந்தார்.
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆதாரம் இருந்தால் ராஜ்நாத் சிங் அதை காட்ட வேண்டும் எனவும், மகாத்மாவுக்குப் பதில் வீர் சாவர்க்கரை தேசத் தந்தையாக பா.ஜ.க முன்னிலைப் படுத்த முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மகாத்மா காந்தியை நான் தேசத் தந்தையாக நினைக்கவில்லை என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில்," 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இந்த தேசத்தை உருவாக்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
இதனால் மகாத்மா காந்தியை நான் சேத சந்தையாக நினைக்கவில்லை. எனது தாத்தா அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு கோரினார். அவர் உண்மையில் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் அவருக்குப் பெரிய பதவி வழங்கப்பட்டிருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு