India

"உங்களை காப்பாத்திக்கோங்க" : SQUID GAME வெப் தொடரை வைத்து மெசேஜ் சொன்ன மும்பை போலிஸ்!

நெட்ஃபிளிக்ஸில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான Squid Game என்ற தொடர் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஒன்பது பாகங்களைக் கொண்ட கொரிய வெப்தொடரான ஸ்குவிட் கேம் வெளியான ஒரே மாதத்தில் 111 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வாழ்க்கையின் இக்கட்டான சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் இந்தத் தொடர் கூறுவதால் உலகம் முழுவதும் இந்தத் தொடருக்கு ரசிகர் பட்டாளம் சேர்ந்து வருகிறது.

Squid Game தொடரின் முதல் விளையாட்டின் பெயர் ரெட் லைட், கிரீன் லைட். இந்த விளையாட்டில் மரத்தடியில் ஒரு பெரிய பொம்மை இருக்கும். இந்த பொம்மை ரெட் லைட் எனக் கூறி திரும்பிப் பார்க்கும். அப்போது போட்டியாளர்கள் யாராவது அசைந்தால் அவர்களைச் சுட்டு வீழ்த்திவிடும். அதாவது போட்டியிலிருந்து வெளியேற்றி விடும்.

இந்த காட்சியைக் கொண்டுதான் மும்பை போலிஸார் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ''சாலையில் ரெட் லைட் ஒளிரும்போது அங்கேயே நின்று உங்கள் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று பதிவிடப்பட்டுள்ளது.

மும்பை போலிஸாரின் இந்த விழிப்புணர்வு வீடியோ வெளியான இரண்டு மணிநேரத்திலேயே 42,869 பேர் பார்த்துள்ளனர். மும்பை போலிஸாரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: சோமாலியாவை நெருங்கும் இந்தியா... உலக பட்டினி தரவரிசையில் அபாயகட்டம்!