India
ஒரே நாளில் 986 பேர் பலி.. கலக்கத்தில் ரஷ்யா : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - அதிபர் புதின் திட்டம் என்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அனைத்து நாடுகளும் பெருமூச்சுவிடும் நேரத்தில், டெல்டா வைரஸ் காரணமாக மீண்டும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளில் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதில் ரஷ்யாவின் நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தற்போதுவரை ரஷ்யாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், 986 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,20,315 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 31,299 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,92,980 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அதிபர் புதின் பார்வையிட்டார். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது உலக நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!