India

பாலியல் வன்கொடுமையால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களின் வயது... NCRB வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

2020ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் 99% சிறுமிகளுக்கு எதிரானவையாக உள்ளது என ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 28,327 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமே 28,058 ஆகும். மேலும் 16 முதல் 18 வயதுக்குள் 14,092 வழக்குகளும், 12 முதல் 16 வயதுக்குள் 10,949 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் இருவரும் கிட்டத்தட்ட சமமாக வன்கொடுமைக்குள்ளாகிறார்கள் என்றாலும், பெண் குழந்தைகள் சிறுவர்களை விட அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகள் இரையாகி வருவதையே இந்த புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “இதுதான் அடுத்த நகைச்சுவை” மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை - கதறும் பா.ஜ.க.வினர்!