India
“ரயிலில் பான்பராக் போட்டு துப்பும் வட இந்தியர்கள்” : கழுவுவதற்கு ரயில்வேக்கு 1200 கோடி செலவு !
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமாக இருந்து வருகிறது. நாடுமுழுவதும் மக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் முதலில் ரயில் பயணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்படி ரயில்களில் பயணம் செய்யும் போது பலர் ரயில்களிலேயே எச்சில் துப்புகிறார்கள். அதிலும் குறிப்பாக பான் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் ரயில் நிலையம் முதல் ரயில் பெட்டிவரை கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறார்கள். இது வடமாநிலங்களில் அதிகமாக உள்ளது.
இதனைச் சுத்தம் செய்வதற்கு ஆண்டு தோறும் ரயில்வே துறைக்கு சுமார் 1200 கோடி வரை செலவு ஆகிறது என்றும் அதிகப்படியான தண்ணீரும் வீணாகுகிறது என இந்திய ரயில்வே துறை மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்த செலவை குறைக்கும் விதமாகக் கையடக்க பை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ரயில் மண்டலங்களில் 42 ரயில்நிலையங்களில் இந்த கையடக்க பை ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் பான் பயன்படுத்தும் பயனாளிகள் இந்த பையை வாங்கிக் கொண்டு, அதில் துப்பினால் ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டி பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!