India
சாப்பாட்டு பொட்டலம் என நினைத்து ரூ.1 லட்சம் பணத்தை தூக்கிச்சென்று ஏமாந்த குரங்கு... ம.பி-யில் அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ. 1 லட்சம் பணத்தைதனது துண்டில் கட்டி ஆட்டோவில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த குரங்கு ஒன்று திடீரென துண்டை பறித்துக்கொண்டு அருகே இருந்த மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்த நபர் பதட்டமடைந்து குரங்கிடம் பணத்தைக் கொடுத்துவிடுமாறு கெஞ்சியுள்ளார்.
பின்னர் மரத்தில் அமர்ந்திருந்த குரங்கு உணவு பொட்டலம் என நினைத்துத் தூக்கி வந்ததைப் பிரித்துப் பார்த்தபோது உணவு இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தது. பிறகு துணி மூட்டையைப் பிரித்ததில் அதில் இருந்த பணம் சாலையில் விழுந்தது.
இதைப் பார்த்த மக்கள் பணத்தை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த பணத்தின் உரிமையாளர் அனைவரையும் தடுத்து கீழே விழுந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். அதில் ரூ. 56 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !