India
மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி.. அதானியின் வருமானம் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1000 கோடியாக அதிகரிப்பு!
கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.
இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர். இந்த விமர்சனங்களை, உண்மையாக்கும் விதமாக புளூம்பெர்க் நிறுவனம் அன்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள்கூட இல்லாதவர் கௌதம் அதானி. ஆனால், தற்போது முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில், நாட்டின் இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி உருவெடுத்து இருக்கிறார்.
அவரது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ (Adani Green Energy limited) என்ற மரபுசாரா எரிசக்தி நிறுவனம், கடந்த 9 மாதங்களில் மட்டும் 200 சதவிகித அளவிற்கு லாப மீட்டி, சக கார்ப்பரேட் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேப்போல் அதானியின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஓர் ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அதானியின் மொத்த சொத்து மதிப்பானது 5,05,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்த அதானி தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!