India
விவசாயிகள் போராடியிருந்தால் நமக்கெல்லாம் எப்படி உணவு கிடைக்கும்? - பாஜக MP பேச்சால் விவசாயிகள் கொதிப்பு!
கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக உள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லையில் கடந்த ஆண்டு முதலே மழை, வெயில், கொரோனா பரவல் என எதையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சியினர் விவசாயிகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நேற்று மாநில முழுவதும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. அப்படி விவசாயிகள் போராடியிருந்தால் நமெக்கால் எப்படி உணவு பொருட்கள் கிடைத்திருக்கும். டெல்லியில் முகாமிட்டிருப்பவர்கள் கொள்ளையர்கள். இந்த கூட்டத்திற்கு தலைவராக ராகேஷ் திகாயத் இருக்கிறார்.
மேலும், பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டபவர்கள் இவர்கள். கனடா போன்ற பல வெளிநாடுகளில் இருந்து இந்த போராட்டத்துக்காக நிதி அளிக்கப்படுகிறது என்றெல்லாம் அக்ஷய்வர் லால் பேசியுள்ளார். பாஜக எம்.பியின் இந்த பேச்சு போராடும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறிவுஜீவியை போன்று பேசியிருக்கும் பாஜக எம்.பிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!