India
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மகள்கள் இருவருக்கும் சங்கர் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இளைய மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனால் மகள் மீது சங்கர் அதிருப்தியில் இருந்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து சங்கர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலிசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சங்கரின் மனைவி, இரண்டு மகள்களும், மகனும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து போலிஸார் அதிர்சியடைந்தனர். மேலும் ஒன்பது வயது குழந்தையும் இறந்து கிடந்தது. அதேபோல் இரண்டு வயதுக் குழந்தை உயிருக்குப் போராடிய நிலையில் மயங்கிக் கிடந்தது.
உடனே போலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த ஐந்து பேரின் உடலையும் மீட்டு போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வீட்டிக்கு வந்த சங்கரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஐந்து பேரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
-
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?