India
கேம் விளையாட செல்போனை கொடுக்க மறுத்த தம்பி... கோபத்தில் அக்கா எடுத்த விபரீத முடிவு : மும்பையில் சோகம்!
மும்பை காந்தி வலி சமதா நகரைச் சேர்ந்த அக்காவும், அவரது தம்பியும் வீட்டில் இருக்கும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.
இந்நிலையில், வழக்கம்போல் முதலில் யார் செல்போனில் கேம் விளையாடுவது என்பதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பி தனது அக்காவிடம் போனை கொடுக்க முடியாது என கூறியுள்ளான.
இதனால் கோபமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று, கடையில் எலி மருந்து வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு இதுகுறித்து தனது தம்பியிடம் தெரிவித்துள்ளார்.
இதைச் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளான். பிறகு பெற்றோர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். உடனவே அவர்கள் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?