India
“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்” : தாலிபான்கள் மீது பழிபோட்ட பா.ஜ.க MLA!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஜூலை மாதத்திலிருந்து ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமையல் சிலிண்டர் விலையும் 900ஐ ரூபாயை கடந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். விலையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் மக்கள் மீது கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் அலட்சியமாகப் பதில் அளித்து வருகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் யார் இப்படி சொல்லி கொடுக்கிறார்கள் என அதிர்ச்சியளிக்கும் வகையில் இவர்களது பதில் உள்ளது.
இந்நிலையில், தாலிபான்கள்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என கர்நாடக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கார்நாடக மாநிலம், ஹூப்ளி - தார்வட் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அரவிந்த் பெல்லாடுதான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் பெல்லாடு, “நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னால் தாலிபான்கள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த கருத்தால் ஆவேசமடைந்த நெட்டிசன்கள், இந்தியாவில் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் ஆப்கானிஸ்தானே இல்லை என விமர்சித்து வருகிறார்கள்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!