India
ஒரே மாதத்தில் 15 லட்சம் பேர் வேலையிழப்பு.. இதுதான் மோடி அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் லட்சணமா?
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதலே வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா தொற்றும் சேர்ந்து வேலையின்மையை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வருவாய் இழப்பால் பெரும்பாலானோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.
இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு பாதிப்புகள் குறித்து இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில், கடந்த ஆகஸ்ட் மாதம்மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக, இந்தியப் பொருளாதாரக் கண் காணிப்பு மையம் (Centre for MonitoringIndian Economy - CMIE) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியப் பொருளாதாரக் கண் காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஜூலை மாதம் பணியில் இருந்தோர் எண்ணிக்கை 3,993,80 (சுமார் 39 கோடியே 93 லட்சம்) இருந்தது. அது ஆகஸ்ட் மாதத்தில் 3,977,80 ஆயிரமாக (39 கோடியே 77 லட்சம்) குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் பணி இழந்துள்ளனர். நகர்ப்புற வேலைவாய்ப் பின்மை ஜூலை மாதத்தில் 8.3 சதவிகிதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவிகிதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப் பின்மை, ஜூலை மாதத்தில் 6.34 சதவிகிதமாக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 7.64 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு நகர்ப்புற வேலையின்மை 7.27 சதவிகிதமாக இருந்தது. அது ஏப்ரல் மாதம் 9.78 சதவிகிதமாக உயர்ந்து மே மாதம் 14.73 சதவிகிதம் ஆனது. பின்னர் ஜூன் மாதம் 10.07 சதவிகிதம், ஜூலை மாதம் 8.3 சதவிகிதம் என்று குறைந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் 9.78 சதவிகிதமாக மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2021 ஜூலை மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த 2021 மே (14.73 சதவிகிதம்), ஜூன் (10.07 சதவிகிதம்) மாதங்களை ஒப்பிடும்போது இதுசற்றே குறைவுதான் என்றாலும், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தற்போதும் வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில்தான் உள்ளது என்று பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!