India
“தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவருக்கு அடித்த ஜாக்பாட்” : நடுக்கடலில் நடந்தது என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் தாரே. மீனவரான இவர் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து சக மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக வாத்வான் கடல் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வலையை விரித்து மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். சந்திரகாந்த விரித்த வலையில் மீன்கள் சிக்கியதை அடுத்து, கடலில் இருந்து வலையை எடுத்துப் பார்த்தபோது மகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது வலையில், மீனவர்களால் 'கடல் தங்கம்' என அழைக்கப்படும் 'கோல் மீன்கள்' சிக்கியதே சந்திரகாந்த் மகிழ்ச்சிக்குக் காரணம்.
இந்த கோல் மீன்களுக்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம். இவர் வலையில் 'தங்கம் மீன்' சிக்கிய விஷயம் பல தனியார் நிறுவனங்களுக்குத் தெரிந்ததை அடுத்து, மீனவர்கள் கரைக்கு வருவருதற்குள் தனியார் நிறுவன அதிகாரிகள் வந்து காத்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் மீனவர்கள் மீன்களை ஏலம் விட்டனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு உத்தர பிரசேதம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் 1 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு மீன்களை ஏலம் எடுத்தன. மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்று திருப்பியபோது ஒரே இரவில் கோடிக்கு பணம் கிடைத்ததில் மீனவர் சந்திரகாந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
'மீன் தங்கம்' என மீனவர்களால் அழைக்கப்படும் 'கோல் மீனின் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயகாந்தஸ். இந்த மீன் இந்தோ - பசுபிக் கடல்பகுதியில் காணப்படும் ஒரு அரியவைக மீனாகும். விலை உயர்ந்த கடல் மீன்களில் கோல் மீனும் ஒன்று.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!