India

“தோல்வி விரக்தியில் பழிவாங்கும் துடிக்கும் ஒன்றிய அரசு?” : விசாரணை அமைப்புகளை ஏவுவதாக மம்தா குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மக்கள் விரோத சட்டங்களை ஏற்படுத்தி மக்களைத் தொடர்ந்து வதைத்து வருகிறது. மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்களை துயருக்குள்ளாக்கி வருகிறது.

பா.ஜ.க ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களின் எண்ணமாகவும் இருக்கிறது. இதற்காக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவருகின்றன.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களிடையே பேசிய மம்தா பானர்ஜி, “ஒன்றிய அரசால் நம்மோடு அரசியலில் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் விசாரணை அமைப்புகளை நமக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். நமது முன்னுரிமை, அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்பதுதான். இதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ரூஜிராவையும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ள தருணத்தில் மம்தா பானர்ஜி, மத்திய அரசை சாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மீண்டும் பயங்கரத் தாக்குதலுக்கு வாய்ப்பு : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா - அதிர்ச்சியில் காபூல் மக்கள்!