India

"கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு" : கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கேரள மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கர்ப்பிணியான நிலையில் அவரது வயிற்றில் வளர்ந்து வரும் கருவும் குறைபாடுகளுடன் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ அறிக்கைக்கான ஆதாரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து நீதிபதிகள்,"கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு கிளைன்ஃபெல்டர் எனும் மரபணு கோளாறு உள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆண் குழந்தைக்காக 8 முறை கருவை கலைக்கச் செய்த கொடூரம்.. இதைவிட மோசமான செயலை செய்த கணவன்!

இந்த குறைபாடு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், குழந்தை வளரும்போது அதன் தேவையைப் புரிந்து கொள்வதில் தாய்க்கு சிரமம் ஏற்படும். எனவே கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் கருவை கலைப்பது குறித்து முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. கருக்கலைப்புச் சட்டப்படி, குறிப்பிட்ட வாரங்கள் வரை வளர்ந்துள்ள கருவை கலைப்பதற்குத் தாயாருக்கு உரிமை உள்ளது. மேலும், வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தால் அதைக் கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிக்கின்றன" என உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: நிர்வாண பூஜை எனக் கூறி 7 மாதங்களாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் : நாசிக்கில் கொடூரம்!