India

சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்து சுதந்திர தினத்தில் பறக்க விட முயன்ற வாலிபர்... விபத்தில் பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், புல்சவங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். இந்த வாலிபர் சொந்தமாகச் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நாடே கொண்டாட உள்ள 75வது சுதந்திர தினத்தில் தான் தயாரித்த ஹெலிகாப்டரை பறக்க விட வேண்டும் என்பதற்காக இஸ்மாயில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருந்த பிளேடு ஒன்று கழன்று இஸ்மாயில் தலையில் விழுந்தது. இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எவ்விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் ஹெலிகாப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் 4 வயது மகனை கொன்ற தாய்... தானும் தூக்கிட்டு தற்கொலை.. பகீர் சம்பவம்!