India

ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து சிறுவன் பலி : ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் நகர். சிறுவனான ராகேஷ் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தி தனது நண்பனிடம் சொல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, திடீரென ஹெட்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சிறுவன் ராகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும் அவரது இரண்டு காதுகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பது நாட்டிலேயே இது முதல் முறையாகும். ஹெட்போன் வெடித்தபோது மயங்கி விழுந்ததில் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடம் ப்ளூடூத் ஹெட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு ப்ளூடூத் ஹெட்போன் காரணமாகி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'ஆன்லைன் வர்த்தகத்தால் அதிகரித்த கடன்... குடும்பத்தோடு விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்' : ஓசூரில் சோகம்!