India
"6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை" : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஒன்றிய அரசு!
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை இராணுவப் படையினர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குத்தான் இந்த பதில் அளித்துள்ளார். இது குறித்து மேலும் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 680 துணை ராணுவப்படையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒன்றிய ஆயுதப்படை போலிஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் குடும்ப பிரச்சனையாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பொருளாதார சிக்கலினாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளையும் நிபுணர்களைக் கொண்டு அரசு ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் விபத்துகளில் 1,764 பேரும், என்கவுண்டரில் 323 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, 2019ம் ஆண்டில் மட்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1948 பேர் கைது செய்துள்ளதாகவும், இதில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!