India
“கல்வெட்டு மறைப்பு” : காங். ஆட்சியில் திறக்கப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறந்த புதுச்சேரி சபாநாயகர்!
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதனைக் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாகப் பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையத்தைச் சுத்தம் செய்து நேற்று சபாநாயகர் செல்வம் மீண்டும் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தக் கட்டிடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் காகிதகங்களை ஒட்டி மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாகக் கட்டியது போல் நாடகம் ஆடி அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் சபாநாயகர் திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!