India
50 ஆயிரம் கோடி : உரிமை கோர ஆள் இல்லாமல் வங்கிகளில் குவிந்திருக்கும் பணம் ? - எப்படி நடந்தது?
நாட்டில் உள்ள வங்கிகள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை ‘உரிமை கோராத பணம்’ உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
முதியோர்களுக்கு மருத்துவ செலவு, குழந்தைகளுக்கான கல்வி செலவு என பல வழிகளில் மக்கள் தங்களின் சம்பளங்களை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மக்கள் சேமித்து வைகின்றனர். இந்நிலையில், அவ்வாறு சேமித்து வைக்கும் தேகையை பெரும்பாலானோர் திரும்பிப் பெற்றுக்கொண்டாலும், சிலர் திரும்ப பெறததால் அந்த பணம் வங்கியிலேயே தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், அதனை உரிமை கோராத பணம் என அழைக்கின்றனர். குறிப்பாக, இந்த தொகை, முதிர்வு காலம் வந்த பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளரோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ உரிமை கோராமல் விடப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது, டெபாசிட் செய்தவரின் திடீர் மரணம், குடும்ப வாரிசுகளுக்கு இடையே ஏற்படும் மோதல் அல்லது திடீர் மரணங்களால் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணம் இருப்பதே குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருப்பது, டெபாசிட் தவணையை பாதியில் கைவிடுவது உட்பட பல்வேறு காரணங்களால் இத்தொகைக்கு உரிமை கோரப்படுவது இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல், இவற்றை ‘உரிமை கோரப்படாத பணம்’ என்று அறிவித்து வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.
இந்நிலையில்தான், வங்கிகள், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் ரூ.50 ஆயிரம் கோடி வரை உரிமை கோராத பணம் உள்ளதாகவும், 2020ம் ஆண்டு மட்டும் வங்கிகளில் ரூ.5,997 கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்றையதினம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் நிதித்துறை தனி பொறுப்பு அமைச்சர் பகவத் காரத் கூறுகையில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள அனைத்து வரத்தக வங்கிகளில், சுமார் 8.01 கோடி கணக்குகளில் இருந்து உரிமை கோரப்படாத பணம் 24,356 கோடி ரூபாய் உள்ளது.
அதேபோல், பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொரு கணக்கிலும் சராசரியாக ரூ.3,030 கோடியாகவும், எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2,710 கோடியாகவும் உள்ளன. தனியார் வங்கிகள் ரூ.3,340 கோடி உள்ளது. தனியார் வங்கிகளில் 6.6 லட்சம் கணக்குகள் உரிமை கோரப்படாமல் உள்ளன.
2020ம் ஆண்டில் மட்டும் வங்கிக் கணக்குகளில், உரிமை கோரப்படாத ரூ.5,997 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தமாக வங்கிகள் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத பணம் ரூ.50 ஆயிரம் கோடியை நெருங்கி உள்ளது. உரிமை கோரப்படாத கணக்குகளின் உரிமையாளர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!