India
பெகாசஸ்: இனி செல்போனுக்கு பதில் லேண்ட்லைன்: அதிகாரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மராட்டிய அரசு!
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. கனக்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர அரசு செல்போன்கள் பயன்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளை அரசின் பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. இதில் "ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கும் போது செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு அதற்குப் பதில் லேண்ட்லைனை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
செல்போனில் பேசும் போது கவனத்துடன் பேசவேண்டும். செல்போனில் வாக்குவாதம் செய்யக்கூடாது. சத்தமாகவும், ஆனாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் செல்போன்களில் அதிக நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அலுவலக கூட்டத்தின் போதும், அதிகாரிகளை சந்திக்கும் போதும், சைலன்ட்டில் இருக்க வேண்டும். இதுபோன்ற கூட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனை அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்