India
நெருங்கிய தேர்தல் ... குறைந்த செல்வாக்கு: சிலைகளை நிறுவி ஓட்டுவாங்க நினைக்கும் யோகி ஆதித்யநாத்!
கொரோனா இரண்டாவது அலையில் உத்தர பிரதேச மாநிலம் பேரழிவை சந்தித்தது. கொரோனாவில் இருந்து மக்களை யோகி ஆதித்யநாத் அரசு காப்பாற்றாததால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் யோகி அரசு உரிய முறையில் அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் மிதக்க விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
கொரோனா பாதித்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே உயிரிழந்தபோது கூட முதல்வர் யோகி ஆதித்யநாத் கொஞ்சம் கூட நாக்கூசாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என பேசினார். மேலும் சொந்த கட்சிக்காரர்களே கொரோனாவை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினர்.
இதனால் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு பா.ஜ.க கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் கடுமையாக சரிந்துள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலாக வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாமா என்று மோடியும், அமித்ஷாவும் நினைப்பதாக பேச்சும் அடிபட்டது. அப்போது யோகி ஆதித்தியநாத் டெல்லி சென்று இருவரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களின் அதிருப்தியைப் பெற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் நடைபெற இருக்கும் தேர்தலை முன்வைத்து, மாநிலம் முழுவதும் சாமியார்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ராமர் சிலைகளை நிறுவி மக்களின் ஓட்டுகளைப் பெறத் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் குஜராத்தில் நிறுவப்பட்ட படல் சிலையை விட மிக உயர்ந்த ராமர் சிலையை நிறுவுவதற்கு யோகி ஆதித்யநாத் அரசு முன் முயற்சி எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2007 - 2012ம் ஆண்டு முதல்வராக இருந்த மாயாவதி உத்திர பிரதேசம் முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் சிலைகளையும் கட்சியின் சின்னமான யானைச் சிலைகளையும் நிறுவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சிலைகளை நிறுவிய பிறகே ஆட்சி கவிழ்ந்தது என்பதும் கூடுதல் தகவல்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!