India
ஆங்கிலத்தையும் ஒழிக்க சதி செய்கிறதா ஒன்றிய மோடி அரசு? - திருச்சி சிவா எம்.பி சரமாரி தாக்கு!
ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்த நாள் முதலே இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிப்பதையே திண்ணமாக கொண்டு ஒவ்வொரு திட்டங்களுக்கான அறிக்கைகளையும் அரசாணைகளையும் இந்தியில் வெளியிட்டு வருகிறது.
அவ்வகையில் கொரோனா தொடர்பான இரு அவைகளின் கட்சிக் குழுத் தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன் தினம் விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஆட்சி மொழியான ஆங்கிலத்தையும் ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்தது பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா, இந்தியாவில் ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழியாக இருக்கையில் இப்படி வெறும் இந்தியில் மட்டும் கோப்புகளை கொடுத்தது ஏன்? பிற மாநில மொழிகளை போன்று ஆட்சி மொழியான ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியா? எனக் கேள்வி எழுப்பியதாகக் கூறினார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து துணை குடியரசுத் தலைவர் சரி செய்வதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறிய திருச்சி சிவா ஒரு புறம் மாநில மொழிகளுக்கு பாராட்டை தெரிவித்துவிட்டு மறுபுறம் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, ஆங்கிலத்தையும் அடியோடு ஒழிக்கக் கூடிய நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என ஐயப்பாட்டை கிளப்பிய திருச்சி சிவா நாடாளுமன்ற அவைகளை ஒரு பொருட்டாகவே ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறது எனவும் சாடியுள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!