India
மது விலக்கு உள்ள மாநிலத்தில் கூட்டாளிகளுடன் மது அருந்திய பா.ஜ.க தலைவர்.. கைது செய்வாரா நிதிஷ்குமார்?!
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 2015ம் ஆண்டு பதவியேற்றபோது, பீகாரில் மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டுவந்தார்.
அப்போது, மதுவிலக்கு சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இந்தச் சட்டத்தை முதல்வர் நிதிஷ்குமார் அமல்படுத்தினார். மேலும் மதுவிலக்கை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளை நிறைவேற்றினார்.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஒருவரே, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.கவின் ஜஞ்சர்பூர் பிரிவின் மாவட்டத் தலைவராக இருக்கும் சியரம் ஷா, மதுபானி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, பாடல் கேட்டுக் கொண்டு மது அருந்தி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சியரம் ஷா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். இதனிடையே, மது விலக்கு அமலில் உள்ளதாகக் கூறப்படும் பீகாருக்குள் மது எப்படி வந்தது? பா.ஜ.க மாவட்டத் தலைவர் சியரம் ஷா மீது முதல்வர் நிதிஷ் குமார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்பது குறித்தும், வீடியோ எப்போது வெளியானது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!