India
பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? OPEC நாடுகளின் புதிய முடிவு; என்ன செய்வார் மோடி?
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்த போது இந்தியாவில் மோடி அரசு விதித்து வரும் கூடுதல் கலால் வரிகளால் பெட்ரோல் டீசலின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு நாள்தோறும் சென்றுக்கொண்டிருக்கிறது.
அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையும் உச்சத்தை தொட்டே வருகிறது. விலைவாசி உயர்வை சமானிக்க முடியாமல் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வை கழிக்கவே திண்டாடி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் சவுதி, அமீரகம் போன்ற OPEC (Oil and Petroleum Exporting Countries) நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முக்கிய முடிவுக்கு வந்துள்ளன. அதாவது எரிபொருட்களின் தேவையை உணர்ந்த OPEC நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக முடிவெடுத்துள்ளன.
சவுதி, அமீரக நாடுகள் இடையே உற்பத்தி தொடர்பாக இருந்த வேறுபாடுகள் களையப்பட்டதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கூடுதலாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய OPEC நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மீதான விலை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்திய பொருளாதார ஆய்வாளர்களின் கூற்றுப்படி கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அதிகரித்தாலும் மோடி அரசு விதித்து வரும் வரிகளை குறைத்தால் மட்டுமே சாமானியர்களின் வாழ்வு ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!