India

"குடியரசுத் தலைவரிடம் முதல்வர் வழங்கியது பத்மஸ்ரீ விருதை விட உயர்ந்தது": மனோகர் தேவதாஸ் பெருமிதம்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகக் குடியரசுத் தலைவரை இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரிடம் மனோகர் தேவதாஸ் எழுதிய 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.

இந்நிலையில்,பத்மஸ்ரீ விருது பெற்ற இந்த புத்தகத்தின் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், 'தனது புத்தகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுத் தலைவரிடம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எழுத்தாளர் பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "இந்த புத்தகத்தைக் கடந்த 1982ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்து 2007ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

அதே போல் இந்த புத்தகம் 1950 ஆம் ஆண்டுகளில் மதுரையில் நிலவிய கலாச்சாரம் பண்பாடு குறித்தும் அதன் வரலாறு குறித்தும் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம்.

அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததை விட தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நான் எழுதிய புத்தகத்தைப் பரிசளித்து இருப்பது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “சட்டமன்றத்தில் கலைஞரின் உருவப்படம்... குடியரசுத் தலைவருக்கு அழைப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!