India
ஊசியால் வாயை தைத்து ரயில்வே தண்டவாளத்தில் தந்தையை கட்டிவைத்த வளர்ப்பு மகன்: ஜார்கண்டில் நடந்த கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு மாவட்டம் பிதிஹாரா கிராமத்தின் அருகே ரயில்வே தண்டவாளத்தில் முதியவரின் கால்கள் கட்டப்பட்டும், உதடுகள் தைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தைக்கப்பட்டிருந்த முதியவரின் உதட்டை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரின் பெயர் போலா ராம் என்பது தெரியவந்தது.
மேலும் முதியவரின் வளர்ப்பு மகன் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து முதியவரைத் தாக்கி, அவரின் உதடுகளை தைத்து, கை கால்களை கட்டி ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு முதியவரை ரயில்வே தண்டவாளத்தில் படுக்கை வைத்து கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்து இவர்கள் சென்றது தெரியவந்தது.
மேலும் வளர்ப்பு மகன் போலா ராமின் இரண்டாவது மனைவிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முதல் மனைவி 2010-ம் ஆண்டு காலமானார். இரண்டாவது மனைவியுடன் இவருக்குத் தகராறு இருந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து மகன் போலா ராமிடமும், இவரின் மனைவியிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!