India
மோடி ஆட்சியை விமர்சித்தற்காக 10,898 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு? : ஜனநாயகத்தைக் கொல்லும் பாஜக அரசு!
கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10,898 பேர் மீது தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2018ம் ஆண்டு உச்சநீதிமன்றமே அரசை விமர்சிப்பது தேசதுரோகம் ஆகாது எனத் தெரிவித்தது. ஆனாலும் தனது போக்கை நிறுத்திக்கொள்ளாத மோடி அரசு, தேசதுரோக சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தைக் கொல்லும் செயலில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தும், கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில், 798 வழக்குகளில் 10,898 பேர் மீதுதேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒன்பது பேர் சிறார். மோடி பிரதமரான பிறகு 65 சதவிகித வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஹத்ராஸ் பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஹத்ராஸில், ஒரு பத்திரிகையாளர் உட்பட 18 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 25 சி.ஏ.ஏ வழக்குகளில் 3,700 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்டில் பதல்கடி போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு சுமத்தியது. பட்டிதார், ஜாட்கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில், நாட்டில் அதிக தேசத்துரோக வழக்குகளைக் கொண்ட மாநிலமாக பீகாரை மாறியுள்ளது. அதன்படி, பீகாரில் 168, உத்தரப்பிரதேசம்- 115, ஜார்க்கண்ட்- 62, கர்நாடகா- 50 தமிழ்நாட்டில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக 80 சதவிகித வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. உ.பி.யில், 115 வழக்குகளில் 77 சதவிகிதம்ஆதித்யநாத் முதல்வரான பிறகு. இவற்றில் பெரும்பாலானவை ‘தேசியவாதம்’ தொடர்பானவை என தெரியவந்துள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!