India
"மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் டி.என்.ஏ. வேறாக இருக்கும்": VHP தலைவர் சாத்வி பிராச்சி புது கண்டுபிடிப்பு!
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமியர்கள் மீது தொடர்ச்சியாக இந்துத்துவா சக்திகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் நாடுமுழுவதும் பிற்போக்கான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர் சாத்வி பிராச்சி மாட்டுக்கறி சாப்பிடுபவர்களின் டி.என்.ஏவை இந்துக்களிடையே ஒருபோதும் காண முடியாது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அன்மையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியர்கள் அனைவரும் ஒரே டிஎன்ஏ வழி வந்தவர்கள் என கருத்து தெரிவித்திருந்தார். இவரின் கருத்திற்குத்தான் சாத்வி பிராக்சி எதிர்வினையாற்றியுள்ளார்.
ராஜஸ்தானின் தவுஸாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாத்வி பிராச்சி, "மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், மாட்டுக்கறி சாப்பிடுவோரின் டிஎன்ஏ, நிச்சயம் ஹிந்துக்களிடம் இருப்பதுபோல் இருக்காது. அவர்களின் டி.என்.ஏ. வேறு வகையாகும்.
மேலும், நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களவையில் சட்டம் நிறைவேற்றவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கா அரசின் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையும் பறிக்கப்பட வேண்டும்.
ஒருவருக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ராஜஸ்தானில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் திருமணங்கள் நடைபெறுகிறது. அதை முதல்வர் அசோக் கெலாட் தடுத்து நிறுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து சாத்வி பிராக்சி கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிராக்சி கருத்திற்கு நூறு சதம் ஒத்துப்போகும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத்தின் பா.ஜ.க அரசு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என்ற வரைவு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!