India
“தவறான பொருளாதார கொள்கை.. இலக்கை மீறி 8.2% தாண்டிய நிதிப்பற்றாக்குறை” : என்ன செய்யப்போகிறது மோடி அரசு?
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது.
அதேப்போல், இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில்,2021-22 நிதியாண்டின் முதல் பாதிக்குள்ளேயே, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை இலக்கை, இந்தியா தாண்டியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டு (Controller General of Accounts - CGA) அதிகாரியின் வலைத்தள பக்க புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அதில், “நடப்பு 2021-22 நிதியாண்டின் மே மாதத்திற்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 8.2 சதவிகிதம் என்று மதிப்பிட்டுள்ளார். நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை ரூ.15 லட்சத்து 6 ஆயிரத்து 812 கோடியாக வைத்திருக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவிகிதமாகும். ஆனால், 2021 மே மாதத்திலேயே நிதிப்பற்றாக்குறை பட்ஜெட் இலக்கைத் தாண்டி 8.2 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.
அதாவது, ஆண்டு முழுமைக்குமான நிதிப்பற்றாக்குறை வரம்பான 15 லட்சத்து 06 ஆயிரத்து 812 கோடி ரூபாயில், 2021 மே மாதத்தில் மட்டும் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ. 1.23 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இது இந்த நிதியாண்டின் மொத்த நிதிப்பற்றாக் குறை இலக்கில் 8.2 சதவீதமாகும்.
ஏப்ரல் மாதம் நிதியாண்டு தொடங்கியது முதலே, கொரோனா 2வது அலையால், ஒருபக்கம் வருவாய்க் குறைவும், மற்றொரு புறம்செலவினங்கள் அதிகரிப்பும் ஏற்பட்டதால், நிதிப்பற்றாக்குறை உயர்ந்துள் ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 மே மாதத்தில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 54 ஆயிரத்து 787 கோடிவருவாய் கிடைத்தது.
இதில் வரி வருவாய் ரூ. 2.33 லட்சம் கோடி; வரியல்லாத இதர வருவாய் ரூ. 1.16 லட்சம்கோடி; கடனல்லாத மூலதன வருவாய் ரூ.4,810 கோடி. அரசுக்குக் கிடைத்துள்ள இந்த மொத்த வருவாயானது பட்ஜெட் இலக்கு மதிப்பீட்டில் 2 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசு மே மாதத்தில் ரூ. 4,77,961 கோடியை (பட்ஜெட்டில் மதிப்பீட்டில் 13.72சதவிகிதம்), செலவிட்டுள்ளது. ரூ.4.15 லட்சம் கோடி வருவாய் கணக்கிலும், ரூ.62,961 கோடி மூலதன கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், மொத்த வருவாய்செலவினங்களில், ரூ. 88,573 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், மானியம் வழங்கும் வகையில் ரூ.66,664 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மே மாதம் வரை, மாநிலங்களுக் கான வரிப் பங்காக, ஒன்றிய அரசு ரூ.78,349 கோடியை வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.13,728 கோடி குறைவு” எனத் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உடல் நலத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்பது அவசியத்தை மோடி அரசு உணரவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!