India

கோவிஷீல்டு போட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அனுமதி: பச்சைக்கொடி காட்டிய நாடுகள் என்னென்ன?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, உலக நாடுகளில் வேலை செய்துவந்தவர்கள் மற்றும் மாணவர்களும் தங்களின் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் சென்றனர். கடந்த இரண்டு வருடங்களாக உலகமே கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை விதித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா வந்த மாணவர்கள் மற்றும் வேலைபார்த்தவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர்.

இப்படிச் செல்பவர்களுக்குக் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உலக நாடுகள் முழுவதும் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதில் கோவேக்சின் தடுப்பூசிக்கு சில நாடுகள் ஏற்றுக்கொள்ளாததால் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.

இதேபோல், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஐரோப்பிய யூனியன் அங்கீராகரம் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால் மாணவர்களும், தொழிலதிபர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவீனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு கோவிஷீல்டு தெடுப்பூ செலுத்திக் கொண்டோருக்கு அனுமதி அளிக்க அந்த நாடுகள் ஒத்துக் கொண்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: “தவறான பொருளாதார கொள்கை.. இலக்கை மீறி 8.2% தாண்டிய நிதிப்பற்றாக்குறை” : என்ன செய்யப்போகிறது மோடி அரசு?