India

120 மில்லியன் ஆக்டிவ் யூசர்ஸ்... ஒரே ஆண்டில் சாதித்த ஷேர்சாட்டின் 'Moj'!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஷேர்சாட்டின் ‘Moj’, மிக அதிக பயனர்களைப் பெற்று இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ தளமாக உருவெடுத்துள்ளது. வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்யும் Moj, 120 மில்லியன் ஆக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட 30 மணி நேரத்திற்குள் 2020 ஜூலை 1 ஆம் தேதி, இந்திய சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், Moj செயலியை அறிமுகப்படுத்தியது.

புதுமையான மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை படைப்பாளர்கள் உருவாக்கவும், பயனர்கள் பொழுதுபோக்கு வீடியோக்களைப் பார்க்கவும் ஒரு தளத்தை வழங்கும் நோக்கத்துடன் ‘Moj’ வடிவமைக்கப்பட்டது.

‘Moj’ பயனர்களுக்கு எளிதானதாக இருக்கவும், புதிய அம்சங்களுடன் கூடிய சமூக வலைதள அனுபவத்திற்காகவும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சிறந்த கேமரா அம்சங்களுக்காக ஸ்னாப் உடன் இணைந்த ஒரே இந்திய தளம் Moj என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது திறமைகளைப் பகிர்ந்து கொள்ளவும், சமூக ஊடக செல்வாக்கு மிகுந்தவர்களாக தங்கள் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளவும் சரியான தளத்தைத் தேடும் லட்சக்கணக்கான படைப்பாளர்களுக்கு Moj சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

1,80,000-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற பாடல்களைக் கொண்ட மிகப்பெரிய இசை நூலகத்தையும் கொண்டுள்ளது Moj. கடந்த ஒரு வருடத்தில், 100 மில்லியனுக்கும் அதிகமான நிமிட உள்ளடக்கங்களை இந்தத் தளத்தில் 18 மில்லியன் பயனர்கள் பதிவேற்றியுள்ளனர்.

ஓராண்டை எட்டியிருக்கும் Moj, 700 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களையும் 800 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்று மிகப்பெரும் தளமாக வளர்ந்து வருகிறது.